Please add products to your cart.
Please add products to your wishlist.
Please add products to compare.
Share
M.R.P.: | ₹ 95.00 |
Price: | 82.00 |
You Save: | ₹ 13.00 (14%) |
கேள்வி பிறந்தது எப்போது?' என்ற கேள்விக்கு பதில் கிடைக்க வேண்டுமென்றால் தனி ஆராய்ச்சியே மேற்கொள்ள வேண்டும்! குழந்தை, மழலை மொழியில் பேசத் துவங்கியதுமே கேள்வி கேட்க ஆரம்பித்து விடுகிறது. அது வளர வளர சந்தேகங்கள் அதிகமாகின்றன. அவை கேள்வியாக உருபெறுகின்றன. ஒரு கேள்விக்கான விடை கிடைத்தவுடன் அடுத்த கேள்வி பிறந்து விடுகிறது. இது ஒரு சங்கிலித் தொடர்! கேள்வி கேட்பதற்கு வயது வரம்பு கிடையாது. சப்ஜெக்ட் தடை கிடையாது. யார் வேண்டுமானாலும் எதைப் பற்றி வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம்; துணைக் கேள்வி கேட்கலாம். கிடைக்கும் பதில்களுக்கு அகக் கண்களைத் திறந்து விடும் வலிமை உண்டு! விகடனில் 'ஹாய் மதன்' பகுதி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இன்று வரை வாசகர்கள் சளைக்காமல் கேள்வி கேட்டு வருகிறார்கள். சலிக்காமல், சுவை குறையாமல் அவற்றுக்கு பதில் சொல்லி வருகிறார் மதன்! இப்போது உங்கள் கரங்களில் தவழ்கிறது 'ஹாய்மதன்'தொகுப்பின் நான்காம் பாகம். இது 2004, நவம்பர் முதல் 2005, அக்டோபர் வரை விகடனில் வெளியான பதில்களின் தொகுப்பு. ஏற்கெனவே வெளியான மூன்று பாகங்கள் போலவே இதிலும் பல்வேறு துறை சம்பந்தமான மதனின் துல்லியமான, அறிவுபூர்வமான பதில்கள் இடம் பெற்றிருப்பதைப் பார்க்கலாம். 'ஹாய் மதன் தொகுப்புகள் எங்களுக்கு ஒரு டிக்ஷனரி மாதிரி பயன்பட்டு வருகின்றன... எது குறித்து சந்தேகம் எழுந்தாலும் நாங்கள் 'ரெஃபர்' செய்வது மதனின் பதில்களைத்தான்...' என்று நிறைய வாசகர்கள் எங்களுக்குக் கடிதம் எழுதுவது உண்டு. விகடன் பிரசுரமாக 'ஹாய் மதன்' தொகுப்புகளை நாங்கள் தொடர்ந்து வெளியிடுவதற்கு ஊக்கமளிப்பது இது மாதிரியான கடிதங்கள்தான்!
Author : Madhan
Published By : Vikatan Pirasuram
Published Year : 2009
Total Pages : 192